உலகம்

இணையவாசிகளைக் கவர்ந்த விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நைல் நதியின் புகைப்படம்

10th Sep 2020 05:58 PM

ADVERTISEMENT

பன்னாட்டு விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட நைல்நதியின் புகைப்படம் இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.

உலகில் மனித நாகரிகம் உருவாவதற்கு நதிகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. நதிகளையொட்டிய பகுதிகளில் வாழத் தொடங்கிய மக்களிடமிருந்தே நாகரிகங்கள் தோன்றியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் எகிப்தின் நாகரிகத் தொட்டிலாக நைல் நதி கருதப்படுகிறது. அந்த நைல் நதியின் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

விண்வெளி வீரர் கிறிஸ் காசிடி தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்ட பன்னாட்டு விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட நைல் நதியின் புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இரவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில்  டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்களின் இரவு நேர ஒளி விளக்குகளால் நைல் நதி மின்னுவது போன்று உள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

செப்டம்பர் 9 அன்று பகிரப்பட்ட இந்த பதிவு 4,500 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் 600 க்கும் மேற்பட்ட பகிர்வுகளையும் பெற்றுள்ளது.

Tags : nile river
ADVERTISEMENT
ADVERTISEMENT