உலகம்

பாகிஸ்தான்: பாதிப்பு 2,99,659-ஆக அதிகரிப்பு

10th Sep 2020 02:09 AM

ADVERTISEMENT


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,99,659-ஆக அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,99,659-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 9 பேர் பலியாகினர். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,359-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,86,506 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 6,794 பேரில், 544 நோயாளிகளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT