உலகம்

பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் மீண்டும் தீ விபத்து

10th Sep 2020 06:08 PM

ADVERTISEMENT

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் எடையுடைய அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 150 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த வெடி விபத்தால் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

இந்த நிலையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள எண்ணெய் மற்றும் டயர் கிடங்கில் இன்று (வியாழக்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  சிறிதுநேரத்தில் தீ மளமளவெனப் பரவி அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கடந்த மாதம் ஏற்பட்ட வெடிவிபத்தை தொடர்ந்து தற்போது அதிக அளவிலான புகையுடன் கூடிய தீ பரவுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT