உலகம்

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் சிங்கப்பூரில் கரோனா அதிகரிப்பு

6th Sep 2020 02:53 PM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் புதிதாக 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 13 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 13 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 57,022-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 13 வெளிநாட்டினரும் அவர்கள் தங்கியிருந்த வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக 603 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 50 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

அரசின் நிர்வாக பற்றக்குறை காரணமாகவே தற்போது வெளிநாட்டினருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் முறையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மருத்துவ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT