உலகம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,97,512 ஆக உயர்வு

4th Sep 2020 12:56 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,97,512-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,97,512-ஆக உயா்ந்துள்ளது. 

ADVERTISEMENT

இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 7 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,335-ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,82,268 போ் குணமடைந்துள்ளனா். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 23,218 கரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், மொத்த பாதிப்பு 2,70,7,470 ஆக உயர்ந்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT