உலகம்

கலிபோர்னியாவை வெப்ப அலை தாக்கும்: காட்டுத் தீ ஏற்படும் அபாயம்

4th Sep 2020 11:52 AM

ADVERTISEMENT

லாஸ்ஏஞ்சலிஸ்: கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் வெப்ப அலைத் தாக்கும் அபாயம் உள்ளதால் மேலும் சில பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கலிபோர்னியாவின் காட்டுப்பகுதிகளில் கடந்த மாத பிற்பாதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏராளமான வனவிலங்குகள் பாதிக்கப்பட்டன. வனப்பகுதியையொட்டியிருந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இதனிடையே தென்மேற்கு கலிபோர்னியாவில் கடுமையான வெப்பநிலை பதிவாக உள்ளதாக தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. முன்பு இருந்ததை விட அதிக அளவிலான வெப்பநிலை பதிவாகும். இந்த வெப்பத்தால் உயிரிழப்புகளும் நிகழ வாய்ப்புள்ளது.

இதனால் வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடிய வயதில் இருக்கும் குழந்தைகள், முதியோர்கள் என அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேற்கு கடலோர பகுதிகளில் உள்ள கட்டடங்கள் வெப்பநிலையால் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வெப்பநிலை செப்டம்பர் 7-ஆம் உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் செப்டம்பர் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT