உலகம்

பிரேசிலில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது

4th Sep 2020 10:55 AM

ADVERTISEMENT

 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 43,773 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,041,638 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான தரவுகளை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது..

ஒரே நாளில் 834 பேர் பலியானதை தொடர்ந்து, இறப்பு எண்ணிக்கை 1,24,614-ஐ எட்டியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம் 3,247,610 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

ADVERTISEMENT

ஒரு நாள் முன்னதாக, பிரேசிலில் 46,934 பேருக்குத் தொற்றும், 1,184 இறப்புகளும் பதிவாகியுள்ளது.

6.1 லட்சத்துக்குக்கும் அதிகமான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக கரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT