உலகம்

நியூசிலாந்தில் புதிதாக இருவருக்கு மட்டுமே கரோனா

3rd Sep 2020 02:40 PM

ADVERTISEMENT

நியூசிலாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு நூறு நாள்கள் வரை கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

இதன் விளைவாக ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு பிறகு சிறிது சிறிதாக கரோனா பரவல் கண்டறியப்பட்டது. பின்னர் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொற்று மீண்டும் குறைய ஆரம்பித்துள்ளது.

தற்போது நியூசிலாந்தில் புதிதாக இரண்டு பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸிலிருந்து ஹாங்காங் வழியாக நியூசிலாந்து வந்து தனிமைப்படுத்திக்கொண்ட 30 வயதுடைய பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் ஆக்லாந்து பகுதியில் இருவருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,408-ஆக அதிகரித்துள்ளது. இதில் 115 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர் என்றும், 79 பேருக்கு சமூக பரவல் மூலம் தொற்று ஏற்பட்டதாகவும் கூறினார்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT