உலகம்

ஜப்பான் வரலாற்றில் சிறந்த பிரதமர்:,ஷின்ஸோ அபேவுக்கு டிரம்ப் பாராட்டு

1st Sep 2020 06:07 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: ஜப்பான் வரலாற்றில் சிறந்த பிரதமர் ஷின்ஸோ அபே என அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே (65) உடல்நலக் குறைவு காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக கடந்த ஆக. 28-ஆம் தேதி அறிவித்தார். 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அதிபர் டிரம்ப் இவ்வாறு பாராட்டு தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இரு தலைவர்களின் தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்திருப்பது: இரு தலைவர்களும் தங்களது உறவு அசாதாரணமானது எனக் குறிப்பிட்டனர். ஜப்பான் வரலாற்றில் ஷின்ஸோ அபே சிறந்த பிரதமர் என அதிபர் டிரம்ப் பாராட்டினார். 

ADVERTISEMENT

மேலும், அபே சிறந்த பணிகளைச் செய்துள்ளதாகவும், அமெரிக்கா, ஜப்பான் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவு இன்று சிறப்பாக உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். அபே விரைவில் தனது பதவியிலிருந்து விலகினாலும், ஜப்பானின் எதிர்காலத்துக்கு அவர் பெரிய பங்கு வகிப்பார் என டிரம்ப் கூறினார். இரு தலைவர்களும் தங்களது அற்புதமான நட்பை வரும் காலங்களிலும் தொடர விரும்புவதாகத் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, செனட் சபை உறுப்பினர் டெட் குரூஸ் ஆகியோரும் ஷின்ஸோ அபேயை பாராட்டியுள்ளனர்.

Tags : Trump praises
ADVERTISEMENT
ADVERTISEMENT