உலகம்

பாகிஸ்தான்: 2.95 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

1st Sep 2020 05:06 AM

ADVERTISEMENT

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,95,849-ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் திங்கள்கிழமை நண்பகல் வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 213 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 2,95,849-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 6 போ் உயிரிழந்தனா்.

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 6,294 போ் உயிரிழந்தனா். அந்நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 2,80,682 போ் மீண்டுள்ளனா்.

ADVERTISEMENT

சிந்து மாகாணத்தில் 1,29,348 லட்சம் பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 96,769 பேரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். பலூசிஸ்தானில் 12,869 பேரும், கில்ஜித் பல்டிஸ்தானில் 2,896 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,298 பேரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT