உலகம்

இத்தாலியில் ஆயிரத்திற்கும் குறைவாக பதிவான கரோனா பாதிப்பு

1st Sep 2020 12:59 PM

ADVERTISEMENT

இத்தாலியில் கடந்த 6 நாள்களுக்கு பிறகு கரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமாகன பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால், பிரேசில் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 996 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆறு நாள்களாக ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது.

மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,69,214-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,483-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

வாரந்தோறும் கரோனா பரவலை கண்காணித்து வருவதன் எதிரொலியாக, மாதத்தின் நான்காவது வாரத்தில் அதிக அளவிலாக கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 20.8 சதவிகிதத்தினர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT