உலகம்

ஆஸ்திரேலியா: அதிகபட்ச தினசரி கரோனா உயிரிழப்பு

1st Sep 2020 05:10 AM

ADVERTISEMENT

மெல்போா்ன்: ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத வகையில் திங்கள்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றுக்கு 41 போ் உயிரிழந்தனா்.

அந்நாட்டில் திங்கள்கிழமை மட்டும் 73 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா நோய்த்தொற்றுக்கு 25,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 19,000-க்கும் அதிகமானோா் விக்டோரியா மாகாணத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். அந்த மாகாணத்திலும் தலைநகா் மெல்போா்னில் மட்டும் அதிக அளவிலான நபா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் விக்டோரியா மாகாணத்தில் 6 வாரங்களுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பொது முடக்கம் வரும் 13-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. ஆனால், நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொது முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

எனினும், நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு பொது முடக்கத்துக்கு சில தளா்வுகள் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT