உலகம்

பிரான்ஸில் 2-வது பொதுமுடக்கம்: பாரிஸில் 700 கி.மீ. நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல்

31st Oct 2020 01:19 PM

ADVERTISEMENT

பிரான்ஸில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால், பாரிஸில் 700 கி.மீ. நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரான்ஸில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் காரணமாக, பாரிஸில் தங்கியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதால், சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பாரிஸ் நகர மக்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணி நிமித்தமாக வசித்து வந்த மக்களும் வெள்ளிக்கிழமை மாலை தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுத்ததன் விளைவாக, நகரின் முக்கிய வீதிகளில் 700 கிலோ மீட்டர் நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிக்கலாமே.. 77 சாலை விதிமீறல்களுக்கு ரூ.42,500 அபராதம்: வாகனத்தை விட்டுவிட்டு நடந்து சென்ற இளைஞர்

ADVERTISEMENT

கடந்த ஏழு மாதங்களில் பிரான்ஸில் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டாவது பொதுமுடக்கம் இதுவாகும்.

அடுத்த ஒரு மாத காலத்துக்கு பாரிஸில் உள்ள தங்களது குடியிருப்புகளுக்குள் அடைந்து கிடக்க விரும்பாத மக்கள், ஒரே நேரத்தில் பாரிஸில் இருந்து புறப்பட்டதால், இதுவரை நாடு காணாத ஒரு போக்குவரத்து நெரிசலைக் காண முடிந்தது.  பொதுமுடக்கம் காரணமாக, போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Tags : France Paris
ADVERTISEMENT
ADVERTISEMENT