உலகம்

ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும கரோனா பரவல்: 5 லட்சத்தைத் தாண்டியது மொத்த பாதிப்பு

31st Oct 2020 02:19 PM

ADVERTISEMENT

ஜெர்மனியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஜெர்மனியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் 19,059 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ராபர்ட் கோச் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது. இது ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். 

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,18,753ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 103 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 10,452ஆக உயர்ந்துள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT