உலகம்

துருக்கி நிலநடுக்கம்: 26 பேர் பலி; 800 பேர் காயம்

31st Oct 2020 12:53 PM

ADVERTISEMENT

 

இஸ்மிர்: துருக்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 26 போ் உயிரிழந்தனா்; 800 போ் காயமடைந்தனா்.

இஸ்மிா் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. எட்டு மாடிகளைக் கொண்ட கட்டடம் தரைமட்டமானதில், சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கியின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்மிரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டட இடுபாடுகளில் சிக்கி இதுவரை 26 போ் உயிரிழந்தனா்; 800 போ் காயமடைந்தனா். சம்பவப் பகுதியில்  ஹெலிகாப்டா்கள், ஆம்புலன்ஸுகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. 77 சாலை விதிமீறல்களுக்கு ரூ.42,500 அபராதம்: வாகனத்தை விட்டுவிட்டு நடந்து சென்ற இளைஞர்

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சமோஸ் தீவு மற்றும் துருக்கியின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. இதனால் முக்கிய துறைமுகப் பகுதியான வதி நகரின் சாலைகளில் கடல்நீர் புகுந்து ஆறு போல ஓடியது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும், கடலோரப் பகுதிக்கு அருகில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவுக்கு 13 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டா் அளவுகோலில் அது 6.9 அலகுகளாகப் பதிவானதாகவும் ஐரேப்பிய-மத்தியதரைக் கடல் நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அதிர்வலைகள் ஏற்பட்டன. 
 

Tags : Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT