உலகம்

பாகிஸ்தான்: கரோனா அச்சத்தால் 11 நீதிமன்றங்கள் மூடல்

DIN

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதிலுள்ள 11 நீதிமன்றங்கள் கரோனா பீதி காரணமாக மூடப்பட்டன. இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இஸ்லாமாபாதிலுள்ள 11 நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நீதிமன்றங்கள் 15 நாள்களுக்கு மூடப்பட்டன. 3 கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றங்கள், ஒரு முதுநிலை சிவில் நீதிமன்றம், 7 சிவில் நீதிமன்றங்கள் ஆகிவை இதில் அடங்கும்.

அந்த நீதிமன்றங்களுக்கு வந்து சென்ற சில வழக்குரைஞா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பாகிஸ்தானில் 3,32,186 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,078 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT