உலகம்

“இன்னும் பல தொற்றுநோய்களை எதிர்கொள்வோம்": எச்சரிக்கும் ஐ.நா. அவை

30th Oct 2020 09:23 PM

ADVERTISEMENT

சூழலுக்கு எதிரான மனிதர்களின் செயலால் எதிர்காலத்தில் இன்னும் பல தொற்றுநோய்களை எதிர்கொள்ள இருக்கிறோம் என ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது.

கரோனா தொற்று காலமாக கடந்த 7 மாதங்களாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உடல்நல பாதிப்புகள் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் பல்வேறு சிக்கல்களை உலகம் சந்தித்தது. இந்நிலையில் வரும் காலத்தில் இன்னும் பல தொற்று நோய்களை உலகம் சந்திக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா அவை,  “மனிதர்களின் சூழலுக்கு எதிரான செயல்களால் நாளுக்கு நாள் இயற்கை பாதிப்படைந்து வருகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும்,“ கரோனா வைரஸ் போன்றே 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைரஸ் கிருமிகள் விலங்குகளிடம் உள்ளன. இவைகளால் மனிதர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.” என எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை   4 கோடியே 55 லட்சத்து 29 ஆயிரத்து 936 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT