உலகம்

ரஷியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு; 18,283 பேருக்குத் தொற்று

30th Oct 2020 03:35 PM

ADVERTISEMENT

ரஷியாவில் அதிகபட்சமாக இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு 18,283 ஆக அதிகரித்துள்ளது.

ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 15,000-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோன்று கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் புதிதாக 18,283 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதுவே சமீபத்தில் அதிகபட்ச ஒருநாள் கரோனா பாதிப்பாகும். 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,268 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 15,99,976 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 355 பேர் உள்பட இதுவரை 27,656 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

அதேநேரத்தில் தற்போதுவரை 12,00,560 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 3,71,760 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரில் 2,300 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT