உலகம்

வியட்நாம் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி: பலர் மாயம்

30th Oct 2020 04:18 PM

ADVERTISEMENT

வியட்நாமில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவில் மாயமானவர்களைத் தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

மத்திய வியட்நாமின் நம் டிரா மை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

கனமழை காரணமாக நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் சாலைகள் சேதமாகின. தொடர்ந்து வீடுகளுக்கும் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. மேலும் 46 பேர் மாயமானார்கள். தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

Tags : vietnam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT