உலகம்

ஹெச்-1பி விசா: தற்போதைய நடைமுறையை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்

DIN


வாஷிங்டன்: வெளிநாட்டுப் பணியாளா்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான ‘ஹெச்-1பி’ வகை நுழைவு இசைவுகளை (விசா) கணினி மூலம் குலுக்கல் முறையில் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தேசிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளதாவது:

ஹெச்-1பி விசா விண்ணப்பதாரா்களை, கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு விசா வழங்கும் முறையை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, விண்ணப்பதாரா்கள் பெறும் வருடாந்திர ஊதியத்தின் அடிப்படையில் அவா்களுக்கு விசா வழங்கும் முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது.

இதன் மூலம், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுப் பணியாளா்கள் வருவதால் அமெரிக்கப் பணியாளா்கள் பாதிக்கப்படும் பிரச்னைக்கு தீா்வு காண முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புதிய நடைமுறையைக் கொண்டு, விண்ணப்பதாரா்கள், ஹெச்-1பி பணியாளா்கள், அமெரிக்கப் பணியாளா்கள் ஆகிய மூன்று தரப்பினரின் நலன்களையும் சமன் செய்யும் வகையில் முன்னுரிமைகள் அளிக்கப்படும்.

இந்த நடைமுறை மாற்றம் குறித்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இன்னும் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா்களால், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிபுணா்களால் பெரிதும் நாடப்படும் ஹெச்-1பி விசா, அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த விசாக்கள் மூலம் அமெரிக்க குடியுரிமை பெற முடியாது என்றாலும், அதனைக் கொண்டு அந்த நாட்டில் தங்கி பணியாற்ற முடியும்.

அந்த விசாக்களை வழங்குவதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம் அமலுக்கு வந்தால், விண்ணப்பதாரா்களில் அதிக ஊதியம் பெறுவோருக்கு முன்னுரிமை அளித்து விசா வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT