உலகம்

துருக்கியின் முன்னாள் பிரதமர் காலமானார்

30th Oct 2020 02:56 PM

ADVERTISEMENT

துருக்கியின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான மெசூட் இல்மாஸ் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

துருக்கி நாட்டின் பிரதமராக மூன்று முறை பணியாற்றியவர் மெசூட் இல்மாஸ். இவர் அநாட்டின் முக்கிய அரசியல்வாதியாக உள்ளார்.

மதர்லேண்ட் கட்சியின் தலைவரான இவர் 1991 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளின் சில மாதங்களிலும், ஜூன் 1997 முதல் ஜனவரி 1999 ஆகிய காலங்களிலும் துருக்கிய பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.

இல்மாஸ் 2019ஆம் ஆண்டு தனது நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் வெள்ளிக்கிழமை பலியானார்.

ADVERTISEMENT

Tags : Mesut Yilmaz
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT