உலகம்

கடந்த 200 நாள்களாக கரோனா பாதிக்கப்படாத நாடு

ANI


ஒரு சில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகள் கரோனா தொற்றுப் பரவலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னமும் மீளமுடியாமல் தவித்து வருகின்றன. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் கடந்த 200 நாள்களாக ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

தைவான் நாட்டில் கடந்த 200 நாள்களில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வேறு யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

உலகம் நாடுகள் கரோனா தொற்று பாதிப்பால் கதிகலங்கி நின்றாலும், தைவானில் இதுவரை 550 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கடைசியாக, ஏப்ரல் 12-ம் தேதிதான், அந்த நாட்டில் வெளிநாடு சென்று வராத ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில், தைவான் நாடு மட்டுமே, கரோனா தொற்றுப் பரவலை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய நாடாக மாறியுள்ளது என்று ஆஸ்திரேலியன் நேஷனல் மருத்துவப் பல்கலையின் பேராசிரியர் பீட்டர் கொலிக்னன் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் கரோனா தொற்றுப் பரவல் ஆரம்பிக்கும்போதே, தைவான் நாட்டில் பல முக்கிய விஷயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக, கரோனா தொற்று ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டதன் விளைவாக இன்று அந்நாடு பொருளாதார அளவிலும் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

நாட்டின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம், அந்நாடு கரோனா பேரிடரில் இருந்து விடுதலையாகியுள்ளது என்று ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஜாஸோன் வாங் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அறிகுறி தென்படுபவர்களை உடனடியாகக் கண்டறிந்து, சிகிச்சை கொடுத்து, 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் என அனைத்தையும் தீவிரமாக பின்பற்றியதும் முக்கியக் காரணமாக இருந்ததாக வாங் கூறியுள்ளார்.

தைவான் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒரு பாடமாக எடுத்து, மற்ற நாடுகளும் அதனைப் பின்பற்றினால் நிச்சயம் கரோனா பேரிடரிலிருந்து மீள முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

உலகளவில் 4,48,71,314  கோடி பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை கரோனாவுக்கு 11,78,751 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT