உலகம்

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம், சுனாமி : இடிந்து விழுந்த கட்டடங்கள்

30th Oct 2020 07:17 PM

ADVERTISEMENT

துருக்கியில் வெள்ளிக்கிழமை மாலை 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

துருக்கியின் மேற்கு மாகாணமான இஸ்மிர் அருகே ஏஜியன் தீவு பகுதியில் வெள்ளிக்கிழமை 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் கட்டடத்தைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

பயராக்லி மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 10 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலநடுக்கத்தால் கிரீஸில் சுனாமி ஏற்பட்டு கரையோர பகுதிகளில் கடல் நீர் சூழ்ந்தது. பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கியில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மாகாணம் முழுவதும்  ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கிடப்பட்டு வருவதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையஅதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT