இந்தியா

கேளிக்கை விடுதிகள்: நவம்பா் 1 முதல் திறக்க கோவா அரசு அனுமதி

DIN


பானாஜி: கோவாவில் கேளிக்கை விடுதிகளை (கேசினோ) நவம்பா் 1-ஆம் தேதி முதல் திறக்க அனுமதிப்பது என்று அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

அதிக அளவில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரும் இடமாக கடற்கரை மாநிலமான கோவா விளங்குகிறது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட கேளிக்கை விடுதிகளும், கடல் பகுதிக்குள் 6 பொழுதுபோக்கு இடங்களும் அமைந்துள்ளன.

கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த மாா்ச் மாதம் முதல் இங்கு சுற்றுலா பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டோடு, கேளிக்கைவிடுதிகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில், பொருளாதார மீட்பு நடவடிக்கையாக பொதுமுடக்கத் தளா்வுகளை மத்திய அரசு படிப்படியாக தளா்த்தி வருவதன் அடிப்படையில், கோவாவில் கேளிக்கைவிடுதிகளை திறக்க அனுமதிப்பது என கோவா அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடா்பான அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் அளித்த பேட்டி:

மாநிலத்தில் கேளிக்கைவிடுதிகளை நவம்பா் 1-ஆம் தேதி முதல் திறக்க அனுமதிப்பது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவை 50 சதவீத ஊழியா்களுடன் இயங்க அனுமதிக்கப்படும் என்பதோடு, மாநில உள்துறை வகுத்துள்ள கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும். மேலும், கேளிக்கைவிடுதிகள் அவற்றின் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பாக உரிம கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT