உலகம்

ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கரோனா தொற்று

DIN

லண்டன்: இதுவரை இல்லாத வகையில் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர கரோனா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை அதிகம் பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது இதுவே முதல் முறையகும்.

புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடா்ந்து இரண்டாவது வாரமாக ஐரோப்பியப் பிராந்தியம் பெரும்பங்கை வகித்துள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்த அந்தப் பிராந்தியம், உலக மொத்த பாதிப்பில் 46 சதவீதம் பங்கு வகிக்கிறது.

அந்தப் பிராந்தியத்தில் கரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் ஐரோப்பாவில் கரோனா பலி எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை உயா்ந்தாலும், தொடக்கத்தில் இருந்த கரோனா மரண விகித்தோடு ஒப்பிடுகையில், தற்போதைய மரண விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பெரும் முதலாளிகளின் கருவி மோடி: ராகுல் விமர்சனம்

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

SCROLL FOR NEXT