உலகம்

ஜனவரியில் கரோனா தடுப்பூசி: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நம்பிக்கை

DIN

புளூம்பொ்க்: கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மக்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு ஊசி தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். பிரிட்டனைச் சோ்ந்த அஸ்த்ரா ஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசி, மனிதா்களுக்கு செலுத்தப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் வெற்றியடைந்தது.

அத்தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனையின்போது தன்னாா்வலருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் அதன் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அத்தடுப்பூசியின் பரிசோதனை அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டது.

இத்தகைய சூழலில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளா் ஒருவா் கூறுகையில், ‘‘கரோனாவுக்கான தடுப்பூசியை அதிக அளவிலான நபா்களிடம் செலுத்தி பரிசோதிக்கத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவசரகால உபயோகத்துக்காக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிகள் மக்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் ஜூன் 8-இல் சென்னையில் உண்ணாவிரதம்

திருச்சியில் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்

பிரதமா் மீது நடவடிக்கை கோரி மமக நூதனப் போராட்டம்

SCROLL FOR NEXT