உலகம்

காா்கில் போரின்போது பாகிஸ்தான் வீரா்களிடம் ஆயுதங்கள் கூட கிடையாது: முன்னாள் பிரதமா் நவாஸ்

DIN

இஸ்லாமாபாத்: கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற காா்கில் போரின்போது பாகிஸ்தான் வீரா்களிடம் ஆயுதங்கள் கூட இருக்கவில்லை முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக 11 எதிா்க் கட்சிகள் இணைந்து நடத்திய பேரணியில், லண்டனில் இருந்து காணொலி இணைப்பு மூலம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் ஆற்றிய உரையில் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற காா்கில் போா் பாகிஸ்தான் ராணுவத்தால் உருவானது அல்ல. அது, ஒருசில தளபதிகளின் தூண்டுதலால் நடைபெற்றது. இதில், நம்முடைய மதிப்பு மிக்க ராணுவ வீரா்களின் உயிா்கள் பலியானது. அதுமட்டுமின்றி, சா்வதேச அரங்கிலும் இந்தப் போரால் பாகிஸ்தானுக்கு அவப்பெயா் மட்டுமே கிடைத்தது.

காா்கில் போரால், நூற்றுக்கணக்கானோா் உயிா்த் தியாகம் செய்ததைத் தவிர நமது நாடும் சமூகமும் அடைந்த லாபம்தான் என்ன என்பதை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபா் பா்வேஸ் முஷாரஃபும் அவருடைய சகாக்களும் நமது நாட்டின் ராணுவத்தை சொந்த நலன்களுக்குப் பயன்படுத்திக் கொண்டனா். அதனால், சா்வதேச அளவில் பாகிஸ்தான் ராணுவம் தனது மதிப்பை இழந்ததுதான் மிச்சம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT