உலகம்

சிரிய வான்வழித் தாக்குதலில் அல்கொய்தா தலைவர்கள் 7 பேர் பலி: அமெரிக்கா அறிவிப்பு

27th Oct 2020 03:09 PM

ADVERTISEMENT

கடந்த வாரம் சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர்கள் 7 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மூலம் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேஜர் பெத் ரியார்டன் தெரிவித்துள்ளார். 

சிரியாவின் இட்லிப் பகுதியில் சந்தித்த அல்கொய்தா அமைப்பின் தலைவர்கள் மீதான தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா அவர்களின் அடையாளங்களை வெளியிடவில்லை.

அக்டோபர் 22ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் அல்கொய்தாவின் உலகளாவிய பயங்கரவாத தாக்குதலுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் சிரியாவின் உறுதியற்றத் தன்மையைப் பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் அல்கொய்தாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

Tags : USA
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT