உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 4.33 கோடியைத் தாண்டியது

26th Oct 2020 11:10 AM

ADVERTISEMENT

 

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,33 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் 3 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,33,46,686 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,19,05,246 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,15,9,093 பேர் உயிரிழந்துள்ளனர்

உலகம் முழுவதும் தற்போது 10,28,2,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 77,796 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

ADVERTISEMENT

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 8,88,9,179 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,30,510 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT