உலகம்

பாகிஸ்தானில் 90% பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்

26th Oct 2020 04:35 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் பேர் சிகிச்சை பெற்று தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 707 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 328,602 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கரோனா தொற்றுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 6,739 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று இதுவரை 311,075 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10,788 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 26,492 உள்பட இதுவரை 42,90,545 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் சிந்து முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பஞ்சாப், கைபர்-பக்துன்க்வா மாகாணங்கள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

மாகாண வாரியாக பாதிப்பு விவரங்கள்:

சிந்து - 143,836, பஞ்சாப் - 102,875, கைபர்-பக்துன்க்வா- 39,043, இஸ்லாமாபாத் - 19,012, பலுசிஸ்தான்- 15,810, கில்கித்-பல்திஸ்தான்- 4,180 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 3,846 பேர்.

Tags : Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT