உலகம்

ரஷியாவில் புதிதாக 16,710 பேருக்கு கரோனா

DIN

ரஷியாவில் புதிதாக 16,710 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரஷியாவில் கடந்த சில தினங்காக கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தினமும் 15,000-க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்றைக்கு 16,521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து 16,710 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் புதிதாக 16,710  பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 4,455 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 15,13,877 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 229 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 26,050ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 7,704 பேர் குணமடைந்ததையடுத்து ஒட்டுமொத்தமாக இதுவரை 11,38,522 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT