உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 4.29 கோடியைத் தாண்டியது 

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,29,46,441 ஆக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

உலகம் முழுவதும் 214  நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது , அதே நேரத்தில் 3,16,73,005 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 10,041,332 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 77,247 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 11,54,857 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 8,827,932     பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 230,068 பேர் உயிரிழந்துள்ளனர்,  அமெரிக்கா முழுவதும் 57,41,611 நோயாளிகள் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 7,078,123 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பு பட்டியலில்  7,864,811    பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 5,381,224 பாதிப்புகளுடன் பிரேசில் மூன்றாவது இடத்திலும், 1,497,167    பாதிப்புகளுடன் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது. 

பிரான்ஸ் (1,086,497), அர்ஜென்டினா (1,081,336), ஸ்பெயின் (1,110,372), கொலம்பியா (1,007,711), மெக்சிகோ (886,800), பெரு (886,214), இங்கிலாந்து (854,010), தென்னாப்பிரிக்கா (714,246), ஈரான் (562,705), இத்தாலி (504,509), சிலி (500,542), ஈராக் (449,153) மற்றும் ஜெர்மனி (429,181) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பலி: தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் 1,56,926 உயிரிழப்புகளுடன் பிரேசில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மெக்ஸிகோவில் (88,743), இங்கிலாந்து (44,745), இத்தாலி (37,210), ஸ்பெயின் (34,752), பிரான்ஸ் (34,536), பெரு (34,033), ஈரான் (32,320), கொலம்பியா (30,000), அர்ஜென்டினா (28,613), ரஷ்யா (25,647), தென்னாப்பிரிக்கா (18,944), சிலி (13,892), இந்தோனேசியா (13,205), ஈக்வடார் (12,542), பெல்ஜியம் (10,658), ஈராக் (10,568) மற்றும் ஜெர்மனி (10,015) பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

SCROLL FOR NEXT