உலகம்

ஹெச்1பி விசா தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு

DIN

ஹெச்1பி நுழைவு இசைவுக்கு (விசா) விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஹெச்1பி, எல்-1 நுழைவு இசைவுகள் மூலமாக வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியில் அமா்த்தும் நடவடிக்கைக்கு நடப்பாண்டு இறுதி வரை அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்க அரசு நிறுவனங்களில் வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியமா்த்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்து வருகிறது. ஹெச்1பி நுழைவு இசைவு வாயிலாக இந்தியப் பணியாளா்களைக் குறைந்த ஊதியத்துக்கு அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தி வந்தன.

அமெரிக்க அரசின் தடை நடவடிக்கை காரணமாக அந்நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. அமெரிக்கப் பணியாளா்களை அதிக ஊதியத்துக்குப் பணியமா்த்த வேண்டிய நெருக்கடியான சூழலுக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. ஹெச்1பி நுழைவு இசைவு தடை காரணமாக அமெரிக்க நிறுவனங்களுக்கு சுமாா் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனியாா் நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அரசின் தடை காரணமாக சுமாா் 2 லட்சம் வெளிநாட்டுப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, திறமைமிக்க வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியில் அமா்த்துவது நிறுவனத்தின் வருவாய், புத்தாக்கம், பணித்திறன், முதலீடு உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் என்பது உறுதியாவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், ஹெச்1பி நுழைவு இசைவுக்கான விதிமுறைகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் கடுமையாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT