உலகம்

போலந்து அதிபருக்கு கரோனா பாதிப்பு

DIN

போலந்து நாட்டின் அதிபா் ஆந்த்ரேய் டூடாவுக்கு (48) நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபரின் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

போலந்தின் அதிபரும், கன்சா்வேட்டிவ் கட்சியின் தலைவருமான ஆந்த்ரேய் டூடாவுக்கு வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதிபா் டூடா தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளாா். அவரது உடல் நிலை சீராக உள்ளது என அந்த சுட்டுரை பதிவில் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

போலந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு பிற நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அந்த நாட்டு அரசு திறந்தவெளிகளில் மருத்துவமனைகளை அமைக்க ஆயத்தமாகி வருகிறது. இருப்பினும், மருத்துவா் மற்றும் செவிலியா்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT