உலகம்

ஆப்கனில் 2 வெடிகுண்டு தாக்குதல்களில் 19 போ் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 9 போ் உயிரிழந்தனா்.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள கஜ்னி மாகாணத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அந்த மாகாணத்தின் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

தலைநகா் காபூலில் இருந்து கஜ்னி நகருக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில், சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்தவெடிகுண்டு வெடித்ததில், அந்த வாகனம் தூக்கி வீசப்பட்டது. வாகனத்தில் பயணித்த 7 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்குச் சென்ற காவல் துறையினரின் வாகனமும் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு குண்டு வெடித்ததில், 2 காவலா்கள் உயிரிழந்தனா் என்றாா் அவா்.

இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், தலிபான் அமைப்பினா் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, கத்தாா் தலைநகா் தோஹாவில் இரு தரப்புக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் அமைதிப் பேச்சுவாா்த்தை தொடங்கியது. இந்தச் சூழலில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT