உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்: 6 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

24th Oct 2020 04:14 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் உள்ள கமல்கான் அணையில் பாதுகாப்புப் பணியில் இருந்த 6 பாதுகாப்புப் படை வீரர்களை தலிபான்கள் சனிக்கிழமை சுட்டுக்கொன்றனர்.

ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான நிம்ரோஸில் கமல்கான் நீர்மின் மற்றும் நீர்ப்பாசன அணை உள்ளது. நிம்ரோஸில் சஹார்பராக் மாவட்டத்தில் ஹெல்மண்ட் ஆற்றில் கட்டப்பட்ட கமல்கான் அணை, 174,000 ஹெக்டேர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கமல்கான் அணை உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாக்க உள்துறை அமைச்சகத்தின் பொது பாதுகாப்புத் துறையால் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ணையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 6 பாதுகாப்புப் பணியாளர்களை தலிபான் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

மேலும் இந்தத் தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர். தாக்குதலுக்கு இன்னும் தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை.

ADVERTISEMENT

Tags : Afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT