உலகம்

விண்ணில் கசியும் சேகரிக்கப்பட்ட மண் துகள்கள்: நாசா விஞ்ஞானிகள் கவலை

24th Oct 2020 05:41 PM

ADVERTISEMENT

200 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள குறுங்கோளில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் துகள்கள் விண்கலத்திலிருந்து விண்ணில் கசிந்து வருவதால் நாசா விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர்.

சூரிய குடும்பத்தைச் சுற்றி வரும் பென்னு விண்கல், பூமியில் இருந்து 32.1 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, புளோரிடாவில் உள்ள கேப் கனவரால் ஏவுதளத்தில் இருந்து கடந்த 2016 செப்டம்பர் 8ஆம் தேதி ஏவியது.

சுமார் 4 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு பென்னு விண்கல்லை அடைந்த ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம், எந்திர சாதனங்கள் மூலம் விண்கல்லில் துளையிட்டு மண் துகள்களை சேகரித்தது. 

மண் துகள்களை சேகரிக்கும் போது விண்கல்லில் வேகமாக மோதியதால் சேகரிப்பு கொள்கலனில் சேதம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சேதமான பகுதியின் வழியாக சேகரிக்கப்பட்ட மண்துகள் விண்ணில் கசிந்து வருவதால் விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் சுமார் 60 கிராம் அளவிற்கு மண்துகள்களாவது சேகரித்துக் கொண்டு வரப்பட வேண்டும் எனும் இலக்கின் சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பென்னுவில் ஆய்வு பணிகளை முடித்தப்பின் ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 2021ஆம் ஆண்டு மார்ச் 21ம் தேதி புறப்பட்டு, 2023ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பூமியை வந்தடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Osiris-Rex
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT