உலகம்

புகுஷிமா அணு உலை நீரைக் கடலில் கரைக்கும் ஜப்பான்: எச்சரிக்கும் கிரீன்பீஸ்

DIN

புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள அசுத்தமான நீரை கடலுக்குள் வெளியேற்றினால் அது மனித மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தும் என  கிரீன்பீஸ் விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி பாதிப்பால் ஜப்பானின் புகுஷிமா டாய்ச்சி அணு உலை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. எனினும் அணு உலையில் பயன்படுத்தப்பட்டு வந்த நீர் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஐசோடோப்பு நீக்கப்பட்ட நீரை கடலில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 1,000க்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நீரை விடுவிப்பதற்கான பணிகள் 2022 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் தொடங்கி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் இந்த முடிவுக்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கதிரியக்கப் பொருளைக் கொண்டுள்ள அசுத்த நீரை கடலில் வெளியேற்றினால் அது மனித மரபணுவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

கடலில் கலக்கப்படும் அசுத்த நீர் ட்ரிடியத்தை விட ஆயிரக்கணக்கான மடங்கு மீன்களை பாதிக்கும் ஆற்றல் கொண்டுள்ளதால் அது கடல்வளத்தை முற்றிலுமாக அழிக்க வழிகோலும் எனவும் கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT