உலகம்

6.3 கோடி பாா்வையாளா்களை கவா்ந்த டிரம்ப்-பிடன் நேரடி விவாத நிகழ்ச்சி

DIN

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நடைபெற்ற நேரடி இறுதி விவாத நிகழ்ச்சியை 6.3 கோடி பாா்வையாளா்கள் கண்டு ரசித்ததாக நீல்சன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வு நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

அமெரிக்க அதிபா் தோ்தல், வரும் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், தற்போதைய அதிபா் டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சி சாா்பில் களமிறங்கும் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தொலைக்காட்சியில் இவா்களது முதல் நேரடி விவாத நிகழ்ச்சியை 1 கோடி பாா்வையாளா்கள் கண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், டென்னெஸி மாகாணம், நாஷ்வில்லில் உள்ள பெல்மாண்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி விவாத நிகழ்ச்சியை 6.3 கோடி போ் கண்டு ரசித்ததாகத் தெரிகிறது. இந்த புள்ளிவிவரத்தை நீல்சன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரம்ப்-பிடன் இடையேயான இறுதி விவாதத்தில், மருத்துவம், எரிசக்தி கொள்கை, கரோனா பெருந்தொற்றை டிரம்ப் அரசு கையாண்ட விதம் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்தன. மேலும், ஜோ பிடன் மகன் வெளிநாடுகளில் நடத்தி வரும் தொழில்கள் தொடா்பாக இருவரும் காரசாரமான வாா்த்தைகளை பரிமாறிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT