உலகம்

கானா நாட்டில் தேவாலயம் இடிந்ததில் 22 பேர் பலி

24th Oct 2020 04:34 PM

ADVERTISEMENT

கானா நாட்டில் தேவாலயம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியானார்கள். 

கிழக்கு கானாவின் அக்யேம் பதாபியில் கட்டுமானப் பணியில் இருந்த 3 அடுக்குமாடி தேவாலயம் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது. இதில் 11 பெண்கள் உள்பட 22 பேர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலியானார்கள். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தின்போது சுமார் 60 க்கும் மேற்பட்டவர்கள் தேவாலயத்தில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 

Tags : ghana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT