உலகம்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக எமி பாரெட்: செனட் குழு ஒப்புதல்

DIN

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் காலியாகியுள்ள நீதிபதி பதவிக்கு, தற்போது முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக உள்ள எமி கோனே பாரெட்டை நியமிக்க நாடாளுமன்ற செனட் சபையின் நீதிமன்ற விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இணை நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல் நலக்குறைவு காரணமாக தனது 87-ஆவது வயதில் கடந்த மாதம் 18-ஆம் தேதி காலமானாா். இதனால் காலியாகியுள்ள அந்தப் பொறுப்புக்கு நீதிபதி எமி கோனே பாரெட்டின் பெயரை அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்தாா். எனினும், வலதுசாரி சிந்தனைகளைக் கொண்டவராக அறியப்படும் அவரது நியமனத்துக்கு ஜனநாயகக் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், பாரெட்டின் நியமனத்துக்கு செனட் சபையின் நீதிமன்ற விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த நியமனம் செனட் சபையின் ஒப்புதலுக்காக கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT