உலகம்

ரஷியாவில் உச்சத்தைத் தொட்ட ஒருநாள் கரோனா பாதிப்பு; 17,340 பேருக்குத் தொற்று

DIN

ரஷியாவில் இன்று அதிகபட்சமாக ஒருநாள் கரோனா பாதிப்பு 17,340 ஆக அதிகரித்துள்ளது.

ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 15,000-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோன்று கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் புதிதாக 17,340 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. ஒருநாளில் கரோனா உறுதி செய்யப்பட்டோரில் இதுவே அதிகமாகும். 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,478 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 14,80,646 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 283 பேர் உள்பட இதுவரை 25,525 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போது வரை 11,19,251 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 3,35,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரில் 2,300 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதியில் பயா்ன் மியுனிக், ரியல் மாட்ரிட்: மான். சிட்டி, ஆா்செனலுக்கு ஏமாற்றம்

சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய பெண் மாலுமி

தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது: ராகுல்

உள்நாட்டு தொழில்நுட்ப ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி: டிஆா்டிஓ

நடிகா் அமீா் கானின் போலி தோ்தல் பிரசார விடியோ: மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT