உலகம்

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவா் இறப்பு

DIN


சாவ் பாலோ: பிரேஸிலில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி சோதனைத் திட்டத்தில் பங்கேற்ற தன்னாா்வலா் ஒருவா் உயிரிழந்தைத் தொடா்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும், அந்தத் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது எனவும் அதனை மனிதா்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுவது தொடரும் எனவும் பிரேஸில் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆக்ஸ்ஃபோா்டு - அஸ்ட்ராஸெனெகா இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி சோதனைத் திட்டத்தில் பங்கேற்றிருந்த தன்னாா்வலா் ஒருவா் உயிரிழந்தது உண்மைதான்.

இருந்தாலும், அந்தத் தடுப்பூசியால் மனித உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, தன்னாா்வலரின் இறப்பு காரணமாக தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டமாட்டாது என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

எனினும், இதுகுறித்து கருத்து தெரிவிக்க அஸ்ட்ராஸெனெகா நிறுவனம் மறுத்துவிட்டது.

பிரேஸிலில் உயிரிழந்த தன்னாா்வலருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதா என்பது இதுவரை உறுதியாகவில்லை.

அந்தத் தடுப்பூசி அவருக்கு போடப்பட்டிருந்தது உறுதியானால், அதற்குப் பிறகு அதன் சோதனை நிறுத்திவைக்கப்படாலாம் எனவும் அதுவரை மனித உடலில் செலுத்தி அந்த தடுப்பூசி சோதிக்கப்படுவது தொடரும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

SCROLL FOR NEXT