உலகம்

சீனத்தின் கரோனா தடுப்பூசியை வாங்கப்போவதில்லை: பிரேசில் அதிபர்

DIN

சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகளை பிரேசில் வாங்கப்போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜெயிா் போல்சொனாரோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சீனத்தின் கரோனா தடுப்பூசியை வாங்கி மக்களுக்குப் பயன்படுத்தவிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அதிபர் இந்த தகவலை அளித்துள்ளார்.

சீனத்தின் சினோவாக் தடுப்பூசியை வாங்க வேண்டாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்த கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்த அதிபர் ஜெயிா் போல்சொனாரோ, சீனத்தின் தடுப்பூசியை வாங்கப்போவதில்லை. அந்த தடுப்பூசிக்கான பரிசோதனை இன்னும் நிறைவடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.


நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பொதுமக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவில் உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வரும் கரோனாவாக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4.6 கோடி கரோனாவாக் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய சாவ்பாலோ மாகாண அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சீனத்தின் தடுப்பூசிகளை பிரேசில் வாங்கப்போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா பாதிப்பு எண்ணிக்கையில், அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 3-ஆவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 53 லட்சம் போ் கரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனா்; 1.55 லட்சம் போ் பலியாகியுள்ளனா். பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT