உலகம்

இந்தியாவில் காற்றின் மாசு மிக மோசம்: டொனால்ட் டிரம்ப்

DIN


வாஷிங்டன்: இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் காற்று மிகவும் மோசமாக மாசு அடைந்துள்ள நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி பேசினார்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில், குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டிடுகிறாா்.

அவருக்கும் ஜனநாயகக் கட்சி துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கும் ஆதரவாக ஒபாமா பென்சில்வேனியா மாகாணம், ஃபிலாடெல்ஃபியா நகரில் அனல் கக்கும் பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்த நிலையில் ஜோ பிடனுடனான இறுதிகட்ட நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதம் டென்னசேயில் உள்ள நாஷ்வில்லேயில் நடைபெற்றது. இதில் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது குறித்து விவாதம் செய்யப்பட்டது.

அப்போது பருவநிலை மாறுபாடு குறித்து பேசிய டிரம்ப்,  சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளை பாருங்கள், அந்த நாடுகளில் எல்லாம் காற்று மிகவும் மாசு அடைந்துள்ளது என்று குற்றம்சாட்டிய டிரம்ப்,  கார்பன் வாயுக்களால் காற்று மண்டலம் மாசு அடைவதை தடுப்பதற்கு தாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார்.  

மேலும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் பல தொழில் நிறுவனங்களால் தொழில் துவங்க முடியவில்லை. ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் அமெரிக்காவில் அதிகமாக தொழில் துவங்கப்படும். அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று டிரம்ப் கூறினார். 

கடந்த முறை நடந்த நேரடி விவாதத்தின்போது, இந்தியா, சீனா, ரஷ்யாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டிய டிரம்ப், காற்று மாசு விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார். 

2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிக்கையின்படி, உலகத்திலேயே அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிடும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஐரோப்பிய யூனியன் மூன்றாவது இடத்திலும், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT