உலகம்

ஆக்ஸ்போர்டு கரோனா  தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் பலி

DIN


ரியோ டி ஜெனிரோ: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற ஒரு தன்னார்வலர் பிரேசிலில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்தனர். 

உலகளவில் நடைபெற்று வரும் பல்வேறு கரோனா நோய்த்தொற்று தடுப்பூசி சோதனைகளில் நடந்துள்ள முதல் உயிரிழப்பு இது.

மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பரிசோதனையில் இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி முன்னணியில் இருந்து வருகிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரேசிலின் ரியோ டிஜெனிரோவைச் சேர்ந்த மருத்துவர் ஜோனோ ஃபீடோசா (28) என்ற தன்னார்வலர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மருத்துவ தன்னார்வலராக இருந்தாலும், தடுப்பூசி மருத்துவ பரிசோதனை தொடரும், எந்தவொரு பாதுகாப்பு கவலையும் இல்லை என்றும் ஆய்வு செய்துள்ளதாகவும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவன ஆய்வின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ ரகசியத்தன்மை என்பது எந்தவொரு தனிப்பட்ட தன்னார்வலரையும் பற்றிய விவரங்களை கொடுக்க முடியாது என்றும்,  ஆனால் மதிப்பாய்வு செய்துகொள்ளும் என்றும்"தற்போதைய ஆய்வைத் தொடர்வது குறித்து எந்தவொரு கவலையும் ஏற்படுத்தவில்லை" என்று அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. 

பிரேசிலில் இதுவரை சுமார் 8,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, உலகளவில் 20,000 க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

உயிரிழந்த தன்னார்வலர் ஒரு இளம் மருத்துவர், அவர் கரோனா நோயாளிகளுக்கு மார்ச் முதல் ரியோ டி ஜெனிரோவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் அவசர வார்டு  மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை அளித்து வந்தவர். 

ஜோனோ ஃபீடோசா, கடந்த ஆண்டு மருத்துவ பட்டம் பெற்றார், மேலும் நோய்த்தொற்றுக்கு முன்பு நல்ல உடல்நலத்துடன் இருந்தார் என்று குடும்பத்தினரும் நண்பர்களும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். 

ஆய்வில் பங்கேற்பவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது நோய்த்தொற்றுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளும் பிற சுகாதாரத் துறை ஊழியர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT