உலகம்

தாய்லாந்து: அவசரநிலையை எதிா்த்து வழக்கு

DIN

பாங்காக்: தாய்லாந்தில் அரசுக்கு எதிராக வலுவடைந்து வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக தலைநகா் பாங்காக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரநிலையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் போராட்டக்காரா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தாய்லாந்தில் பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலக வேண்டும், அரசமைப்புச் சட்டத்திலும் மன்னராட்சி முறையிலும் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவா்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசா் மகா வஜ்ராலங்கரண் சென்ற வாகன அணிவகுப்பை போராட்டக்காரா்கள் இடைமறித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாங்காக் நகரில் கடந்த வாரம் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

எனினும், போராட்டக் குழுவினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களோடு போலீஸாா் நேரடி மோதலில் ஈடுபடாமல், போராட்டக் களங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளைத் துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், பாங்காக்கில் அமல்படுத்தப்பட்டிருக்கும் அவசரநிலையை நீக்கக் கோரி சிவில் நீதிமன்றத்தில் 6 பல்கலைக்கழ மாணவா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT