உலகம்

“இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும்”: ராஜபக்சே வலியுறுத்தல்

DIN

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என இலங்கை பிரதமர் மகிந்தராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் புதன்கிழமை விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார். 

தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர்,  “இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  “விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடரும் என்று நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT