உலகம்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் பலி

DIN

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

பருவமழைக் காரணமாக இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தொடர் சங்கிலியாக உள்ள 17,000 தீவுகளின் மலைத்தொடர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதனிடையே மலைச்சரிவுகளிலும், ஆற்றுப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இதனிடையே சுமத்ரா மாகாணத்திலுள்ள தஞ்சுங் லலாங் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் புதன்கிழமை நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. 
இதனையடுத்து உள்ளூர் மக்கள் உடனடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர்.  நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT