உலகம்

தாய்லாந்தில் வலுக்கும் போராட்டம்: அவசரநிலை உத்தரவை நீக்கியது அரசு

DIN

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக வலுவடைந்து வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக தலைநகா் பாங்காக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரநிலையை நீக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலக வேண்டும், அரசமைப்புச் சட்டத்திலும் மன்னராட்சி முறையிலும் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவா்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தீவிரமடைந்து வரும்  போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாங்காக் நகரில் கடந்த வாரம் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. எனினும், போராட்டக் குழுவினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர். 

இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள் அவரசநிலை உத்தரவைப் பொருட்படுத்தாமல் அரசு மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். மேலும் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரநிலை உத்தரவைத் திரும்பப் பெற உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

இந்நிலையில் மாணவர்களின் எதிர்ப்பின் காரணமான பாங்காங்கில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

எனினும் பிரதமர் பதவியிலிருந்து பிரயுத் சான்-ஓச்சா மூன்று நாள்களுக்கு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT